ஆபிராம் இல் இருந்து – ஆபிரகாம்

கடவுள் தரிசனம்

கடவுள்
– ஆபிராமே!
நான் சர்வ வல்லமையுள்ள தேவன்.
நீ எனக்கு முன்னால உத்தமனா நட.
நான் உனக்கும் எனக்கும் நடுவுல என்னோட உடன்படிக்கை பண்றேன்.
அது என்னன்னா, உன்னை மிகவும் அதிகமா பெருகப்பண்ணுவேன்.

ஆபிராம்
முகங்குப்புற விழுந்து கடவுளே நீர் தான் என்னோட கடவுள்.

கடவுள்
– உன்கூட பண்ற உடன்படிக்கை என்னன்னா
1. நீ திரளான ஜனங்களுக்கு தகப்பனாயிருப்ப
2. இனிமே உன் பேரு ஆபிரகாம்
3. உன்னோட சந்ததி மிகவும் அதிகமாய் பெருகும்
4. நிறைய மக்கள் கூட்டங்கள் உருவாகும்
5. உன் வம்சத்தில ராஜாக்கள் வருவாங்க

இது,
• உனக்கும்
• உனக்கு பின்வரும் சந்ததிக்கும் நான்தான் கடவுள் என்று சொல்லுகிற உடன்படிக்கை. அதுவும் நித்திய உடன்படிக்கை.
• பரதேசியாய் இருக்கிற இந்த கானான் தேசத்தை உன் சந்ததிக்கு நித்திய சுதந்திரமாக கொடுத்து, அவர்களுக்கு தேவனாயிருப்பேன்.
நீயும், உன் சந்ததியும் என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள். அது என்னன்னா
விருத்தசேதனம்
உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளுக்கும்
• உன் வீட்டில் பிறந்த பிள்ளை
• உன் பணத்திற்கு கொள்ளப்பட்டவன்
எல்லாருக்கும் விருத்தசேதனம் பண்ணவேண்டும். அதுவும் தலைமுறை தலைமுறையாக விருத்தசேதனம் பண்ணனும். இப்படி செய்றதால உன் மாம்சத்தில என்னோட உடன்படிக்கை இருக்கும். யாராவது பண்ணாம இருந்தா அவன் தன் ஜனத்தில இல்லாம போய்டுவான்.

இஸ்மவேல் தோன்றல்

இஸ்மவேல் வம்சம் ( சாராய், ஆபிராம், ஆகார்)

சாராய்
– ஆபிராமே, கடவுள் எனக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கவில்லை. அதனால, என்னோட
அடிமை ஆகாரோட சேர்ந்து குழந்தை பெத்துக் கொடுங்க.

ஆபிராம்
– சரி.

கானான் தேசத்தில பத்து வருசத்துக்கு (ஆபிராம் 85 வயசு) அப்புறம், சாராய் ,
ஆபிராமுக்கு ஆகாரை இரண்டாவதா கல்யானம் முடிச்சு வைச்சாங்க. அப்புறம் ஆகார்
கர்ப்பம் தரிச்சாங்க.

ஆகார் தான் கர்ப்பம் தரிச்சு, சாராய்க்கு குழந்தை இல்லாததால ரொம்ப அற்பமா
நடத்தினாங்க.

சாராய் ஆபிராமிடம்
– எல்லாம் உங்களால தான். எனக்கு உங்களாலதான் அநியாயம் வந்துச்சு. ஆகார்
கர்ப்பம் தரிச்ச உடனே என்னைய எப்படி நடத்துறா பாருங்களேன். கடவுள் தான்
எனக்கும் உங்களுக்கும் நடுவுல நின்னு நியாயம் செய்யனும்.

ஆபிராம்
– நீ தானே எல்லாம் பண்ணின. ஆகார் உன்னோட அடிமை தான். அதனால உனக்கு எது
நல்லதுனு தோணுதோ அதைச் செய்.

சாராய்
– சரி. அவள வைச்சுக்கிறேன். ஆகாரைப் பண்ற கொடுமையில அவ ஓடியே போகனும்.

சாராய்
ஆகாரை ரொம்ப கொடுமைப்படுத்தினாங்க. அதுல ஆகார் வீட்டை விட்டே
ஓடிப்போய்ட்டாங்க.

ஆகார் காட்டு வழியா சூருக்குப் போகிற வழியில

கர்த்தருடைய
தூதனானவர்
– ஆகாரே! எங்க இருந்து வர்ற? எங்கே போகிற?

ஆகார்
– நான் சாராயை விட்டு ஓடிப் போறேன். ரொம்ப கொடுமையா இருக்கு.

கர்த்தருடைய
தூதனானவர்
– நீ சாராய் கிட்டவே திரும்பிப் போ.

  • உன்னோட சந்ததியை பெருகப் பண்றேன்.
  • அத எண்ணவே முடியாது.
  • நீ கர்ப்பமா இருக்கிறதானே. ஒரு ஆண் குழந்தை பிறக்கும்.

· கடவுள் உன்னோட வேதனையான புலம்பலை கேட்டதால குழந்தைக்கு இஸ்மவேல் என்று பெயர்
வை.

  • அவன் துஷ்டமனிதாயிருப்பான்.

· அவனுடைய கை எல்லாருக்கு விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு
விரோதமாகவும் இருக்கும்.

  • தன்னோட சகோதரர் எல்லாருக்கு விரோதமாகவும் அவன் குடியிருப்பான்.

ஆகார்
– கடவுளே உண்மையிலே என்னைக் காண்பவரை நான் கண்டேன். என்னைப் பொறுத்த வரைக்கும்
உம்முடைய பெயர், நீர் என்னைக் காண்கிற தேவன்.

இடம் பெயர் – லகாய்ரோயீ – காதேசுக்கும், பாரேசுக்கும்
இடையிலுள்ள இடம்.

ஆகார்
– ஒரு குழந்தையைப் பெற்றார். அக்குழந்தைக்கு இஸ்மவேல் என்று பெயரிட்டார்.
அப்பொழுது ஆபிராம் வயது 86.

ஆபிராமுக்கு கடவுள் தரிசனமாகுதல்

ஆபிராமுக்குத் தரிசனமாகிய கடவுள்,

கடவுள் : ஆபிராமே பயப்படாதே. நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய
பலனுமாயிருக்கிறேன்.

ஆபிராம் : கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர். எனக்கு
பிள்ளையில்லை. தமஸ்கு ஊரான எலியேசர் என் வீட்டைப் பார்த்துக்கிட்டு
இருக்கிறான்.

நீங்க எனக்கு பிள்ளை கொடுக்காததால, என் வீட்ல பிறந்த எலியேசர்தான் வாரிசா
கடவுளே?

கடவுள் : எலியேசர் உனக்கு வாரிசு கிடையாது. உன் கர்ப்பப்பிறப்புதான் உன்னோட
வாரிசு. நீ வெளில வா. வானத்தை அண்ணாந்து பார். எவ்ளோ நட்சத்திரம் இருக்குது.
உன்னால எண்ண முடியுமா? எண்ணிப் பாரு, அந்த அளவுக்கு உன்னோட சந்ததியை பெருகப்
பண்ணுவேன்.

ஆபிராம் : கடவுளே கண்டிப்பா நடக்கும்னு எதிர்பார்க்கிறேன்.

கடவுள் மனதிற்குள் – இவ்ளோ விசுவாசமாயிருக்கிறானே.
மீண்டும் கடவுள் – ஆபிராமே இந்த தேசத்தையே உனக்கு கொடுப்பதற்காகத்தான், உன்னை
கல்தேயருடைய ஊர் என்ற இடத்திலிருந்து கூப்பிட்டு வந்த கடவுள் நான்தான்.
தெரியும்ல.

ஆபிராம் – கடவுளே, இந்த நாட்டை எனக்குக் கொடுப்பேனு சொல்றீங்களே ஏதாவது
அடையாளம் தருவீங்களா?

கடவுள் – நீ போய், 3 வயசுல
* கிடாரி
* வெள்ளாடு
* ஆட்டுக்கடா
* காட்டுப்புறா
* புறாக்குஞ்சு
எல்லாத்தையும் கொண்டு வா.

ஆபிராம் – எல்லாத்தையும் கொண்டு வந்து, பறவைகளைத் தவிர எல்லாத்தையும் இரண்டா
வெட்டி எதுக்க எதுக்க வைத்தாரு.
அந்தப் பறவைகள் வெட்டி வைச்சிருந்த வெட்டி வைச்சிருந்த கறி மேல போய் உட்காந்துச்சு. உடனே ஆபிராம்
அந்தப் பறவைகளை துரத்திட்டாரு.
சூரியன் மறையப் போகிற நேரத்தில, ஆபிராம் மனது ரொம்ப திகிலடைஞ்சுச்சு, ஏதோ
இருட்டு வந்து மூடின மாதிரி இருந்துச்சு. அப்ப

கடவுள் ஆபிராமைப் பார்த்து,
· உன் சந்ததி – வேற தேசத்தில 400 வருசம் அடிமையாயிருப்பாங்க. அவங்கள அந்த
தேசத்து மக்கள் கொடுமைப்படுத்துவாங்க.
· அந்த தேசத்து மக்களை நான் பழிவாங்குவேன். அப்புறம் உன் சந்ததி முழுக்க நிறைய
பொருட்களோடு திரும்பி வருவாங்க.

  • நீ சாகுமட்டும் சமாதானமா இருப்ப.
  • நல்லா முதிர்வயதில தான் சாவ.

· உன்னோட 4வது தலைமுறை சந்ததி திரும்பி இங்கேய வருவாங்க. எமோரியர் ரொம்ப பாவம்
பண்ணிட்டு இருக்காங்க. அவங்க பாவம் ஒரு முடிவுக்கு வர காலம் இருக்கு.
சூரியன் மறைஞ்சு ரொம்ப நேரம் ஆகி, நள்ளிரவாச்சு

அப்ப, ஆபிராம் வெட்டி வைச்சிருந்த கறி எறிய ஆரம்பிச்சு, புகை வந்து போச்சு. கடவுள்
ஆபிராமோட பலியை ஏத்திக்கிடுற விதமா இப்படி நடந்துச்சு.

கடவுள் ஆபிராம் – உடன்படிக்கை

எகிப்தின் நதி தொடங்கி, ஐபிராத்து நதி வரைக்கும் கீழ உள்ள மக்கள் வாழக்கூடிய
இடத்தை முழுக்க உனக்கு கொடுப்பேன். அங்க இருந்தவங்க
கேனியர், கெனிசியர், கத்மோனியர், ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயிமீர்,
எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர். எத்தனை பேர் இருந்தாலும் கடவுள் வெற்றி தருவாார்.

2வது முறை ஆசிர்வாதம் , ஆபிராம் லோத்தை காப்பாற்றுதல்

ஆசிர்வாதம்

கடவுள் ஆபிராமைப் பார்த்து,

நீ எல்லா இடத்தையும் சுத்தி பாரு. கிழக்க, மேற்கே, வடக்கே, தெற்கே என்று
எல்லாத் திசையிலேயும் சுத்திப் பாரு. நீ பார்க்கிற எல்லாத்தையும் உனக்கும்
உன்னோட சந்ததிக்கும் என்றைக்கும் கொடுப்பேன்.

நீ எந்திரிச்சு கூடாரத்தைக் காலி பண்ணிட்டு எல்லா இடமும் சுத்து, நீ
எங்கெல்லாம் போறியோ, அது எவ்ளோ நீளமா இருந்தாலும் சரி, அகலமானாலும் சரி, நீ
போற இடம் எல்லாத்தையும் உனக்குக் கொடுக்கிறேன்.

ஆபிராம் – சரி கடவுளே.

அப்புறம், ஆபிராம் கூடாரத்தைக் காலி பண்ணிட்டு எபிரோன்-ல என்ற இடத்திலுள்ள
மம்ரே மக்கள் இருக்கிற சமமான பூமியிலே போய், கடவுளுக்கு ஒரு பலிபீடம்
கட்டினார்.

ஆபிராம் லோத்தை காப்பாற்றுதல்

அந்த நாட்களில், கீழ்க்கண்ட ராஜாக்கள் இருந்தார்கள். இவர்களில் எல்லாருமே
கெதர்லா கோமேர்-க்கு கீழ ஆட்சி செய்தாங்க, 13வது வருசத்தில இரண்டு அணியா
பிரிஞ்சாங்க. அது கீழ கொடுக்கப்பட்டது.

அணி 1

அணி 2

தேசம்

ராஜா

தேசம்

ராஜா

1

சிநெயார் அம்ராப்பேல் சோதோம் பேரா
2 ஏலாசார் அரியோகு கொமோரா பிர்சா
3 ஏலாம் கெதர்லா கோமேர் அத்மா சிநெயா
4 ஜாதிகள் திதியால் செபோயீமின் செமேபரோர்
5

பேலா சோவார்
சண்டையிட்ட இடம் – சித்தீம் பள்ளத்தாக்கு

இரண்டா பிரிஞ்சதாலேயும், கலகம் பண்ணினதாலேயும், கெதர்லாகோமேர் தலைமையில 1ம்
அணி 14வது வருசத்தில கீழ உள்ள எல்லா ஊரையும் அந்த மக்களையும் அழிச்சிட்டாங்க.

இடம்

மக்கள்

எல்பாரான் மட்டும் தோற்கடிச்சவங்க

அஸ்தரோத்கர்னாயீம் ரெப்பாயீமியர்
காம் சூசிமியர்
சாவேகீரியத்தாயீம் ஏமியர்
சேயீர் ஓரியர்

திரும்பி வந்து தோற்கடிச்சவங்க

காதேஸ்(என்மிஸ்பாத்) அமலேக்கியரின் நாடுகள்
அத்சாத்சோன் தாமார் எமோரியர்

அதனால 2வது அணியும் சீத்திம் பள்ளத்தாக்குல கூடி 1வது அணியும் சண்டை
போட்டாங்க. அதுல சோதோம், கொமோரா ராஜா-வை தவிர எல்லாரையும் கொன்னுட்டாங்க.
அப்புறம் சோதோம், கொமோரா – வை முழுக்க கொள்ளையடிச்சுட்டாங்க. அதுல சோதோம்
எதுக்க இருந்த லோத், அவன் கூட எல்லா பொருளையும் கொள்ளையடிச்சுட்டு
போய்ட்டாங்க.

அதுல தப்பிச்ச லோத்தோட ஒரு வேலைக்காரன் ஓடிப்போய், ஆபிராம் கிட்ட எல்லா
விவரத்தையும் சொன்னான்.

உடனே ஆபிராம் தன் வீட்டில இருந்த 318 பேருக்கு ஆயுதம் கொடுத்து, தாண்
அப்டிங்கிற ஊர் வரைக்கும் போய், ராத்திரி நேரத்திரல கெதர்லாகோமர் படையை தோற்கடிச்சுட்டு லோத்தையும் அவன் கூட இருந்த எல்லாரையும், எல்லா பொருளையும் கொண்டு வந்தான்.

அப்ப சோதோம் ராஜா, ஆபிராமுக்கு நன்றி சொல்ல, சோவே பள்ளத்தாக்கு அப்டிங்கிற
இடத்துல சந்திச்சாங்க.

அப்ப உன்னதமான கடவுளுடைய ஆசாரியனாயிருந்த மெல்கிசேதேக்கு (சாலேமின் ராஜா) அப்பமும், திராட்சரசமும் கொண்டுவந்து ஆபிராமை நோக்கி

வானத்தையும், பூமியையும் படைச்ச உன்னதமான கடவுளுடைய ஆசிர்வாதம் ஆபிராமாகிய உனக்கு உண்டாவதாக என்று சொன்னார்.

ஆபிராம், தன்கிட்ட இருந்த எல்லாவற்றிலேயும் தசமபாகம் கொடுத்தார்.

 

சோதோம் ராஜா – ஆபிராம், எனக்கு இந்த மக்கள் மட்டும் போதும். நீ எல்லா பொன், பொருள் எல்லாத்தையும் எடுத்துக்கோ.

ஆபிராம் – வேண்டாம், வேண்டாம். எனக்கு பொன்னோ, பொருளோ வருதுன்னு சொன்னா அது கடவுள் கிட்ட இருந்து மட்டும் தான் கிடைக்கனும். நீங்க கொடுத்ததா இருக்கக் கூடாது. இந்த பொன்னோ பொருளோ எதுவுமே வேணாம்.

லோத்துக்குள்ளத எடுத்துக்கிடுறோம். அது தவிர போர்ல சண்டை போட்ட

என் கூட வந்த ஆநேர், எஸ்கோல் மற்றும் மம்ரே இவங்களுக்கு மட்டும் தேவையானதை கொடுங்க.
 
 
குறிப்பு :
சாலேமின் ராஜா – சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு பற்றி தெளிவான குறிப்புகள் இல்லை.
தசமபாகம் – முதன் முதலாக தசமபாகம் கொடுக்கப்பட்டுள்ளது.
மம்ரே – இவங்க இடத்தில தான் ஆபிராம் குடியிருந்தான்.
ஆநேர், எஸ்கோல் – இவர்கள் இருவரும் மம்ரேவின் சகோதரர்கள்.

லோத் பிரிந்து செல்லுதல்

எகிப்து தேசத்தை விட்டு புறப்பட்டபோது, ஆபிராம் பெரிய பணக்காரனாயிருந்தாரு.
அவருக்கு தங்கம், வெள்ளி, ஆடுகள், மாடுகள் ஏராளமாயிருந்தது.

அப்படியே அவங்க ஒவ்வொரு இடமா வந்து, பழைய மலைக்கு வந்தாங்க. அந்த மலை ஏற்கனவே
பார்த்தோம். அது ஆயி பட்டணத்திற்கும், பெத்தேலுக்கும் நடுவுல பலிபீடம் கட்டின
வரைக்கும் வந்தாங்க.

ஆபிராம் அங்க கடவுள தொழுது கொண்டார்.

அங்கேயே தங்குறதுக்கு கூடாரம்லாம் போட்டாங்க. லோத்துக்கும் நிறைய ஆடு மாடுகள்,
கூடாரம்லாம் இருந்துச்சு. அதனால அங்க பிரச்சினை வந்துச்சு. ஆபிராம்
வேலைக்காரங்களும், லோத் வேலைக்காரங்களும் சண்டை போட்டுட்டே இருந்தாங்க.

ஆபிராம் – லோத் இங்க வா. நம்ம இரண்டு பேரும் சொந்தக்காரங்க. ஆனா நம்ம
வேலைக்காரங்க, நமக்குள்ள சண்டையை மூட்டி விட்ருவாங்க. அதனால, நாம பிரிஞ்சி
போறதுதான நல்லது.

லோத் – சரி சித்தப்பா. நான் இப்ப என்ன செய்யன்னு சொல்லுங்க நான்
கேட்டுக்கிடுறேன்.

ஆபிராம் – ம்ம். அப்படியே பண்ணிடலாம். பிரிஞ்சி போறதுதான் நல்லது. இவ்ளோ இடம்
இருக்கு. நீ கிழக்க போனா நான் மேற்க போறேன். நீ வடக்க போனா நான் தெற்க போறேன்.
நீயே சொல்லு சரியா?

லோத் – சரி சித்தப்பா. யோர்தான் பக்கத்தில அழகா இருக்குது. சோவார் போகிற வழி
வரைக்கும் அது ஏதேன் தோட்டம் போல, ரொம்ப அழகா இருக்குது. அதனால நான் அங்கேயே
போறேன்.

ஆபிராம் – ம்ம். சரி. நீ அங்க போ.

லோத்தும் அவனோட எல்லா ஆடுகள், மாடுகள், மற்றும் வேலையாட்கள் எல்லாரையும்
கூட்டிட்டு யோர்தான் பக்கத்தில சோதோம்-க்கு எதிராக கூடாரம் போட்டு வாழ
ஆரம்பிச்சாங்க. அந்த சோதோமில வாழுறவங்க ரொம்ப ரொம்ப கெட்டவங்க. அவங்கள கடவுள்
வெறுத்தாரு.

எகிப்தில் ஆபிராம்

எகிப்து தேசத்தில் – ஆபிராம்

முற்கதை :
ஆடு, மாடு மேய்க்கிற ஆபிராம், கடவுள் சொன்னபடியே ஒவ்வொரு இடமாக போகிற போது,
கானான் தேசத்தில பஞ்சம் வந்திருச்சு. அப்ப எகிப்தில பஞ்சம் இல்லாம
இருந்துச்சு. அதனால எகிப்து தேசத்துக்குப் போகலாம்னு அங்க வந்தாங்க.
ஆபிராம் எல்லாரையும் நோக்கி
இப்ப எல்லாரும் எகிப்துக்குப் போறோம். அதனால கவனமா இருங்க சரியா?
ஆபிராம் சாராய் ஐ பார்த்து
நீ ரொம்ப அழகா இருக்கிற. என்னைய உன்னோட கணவன் சொன்னா, உனக்காக என்னைய
கொன்னுடுவாங்க. அதனால, ஏன்னோட தங்கச்சினு சொல்லிடு சரியா.

எகிப்து தேசம்.

எல்லாரும் எகிப்துக்கு வந்துட்டாங்க, சாராய் ரொம்ப அழகா இருந்ததால எல்லாரும்
அவள ரொம்ப புகழ்ந்தாங்க.

இந்த விசயம் பாரோ (எகிப்து ராஜாவின் – அடைமொழி ) காதுக்குப் போனப்ப
எல்லாரையும் வரச் சொன்னான். அவங்களும் வந்தாங்க. பாரோ-க்கும் சாராய் மேல ஆசை.
உடனே எல்லா வசதிகளும் செய்து கொடுக்கச் சொன்னான்.

ராஜாவே சொன்னதால ஆபிராமுக்கு ஏற்கனவே இருந்தது போக

1. ஆடு மாடுகள்
2. கழுதைகள்
3. வேலைக்காரர்கள், வேலைக்காரிகள்
4. கோளிகைக் கழுதைகள்
5. ஒட்டகங்கள்

எல்லாத்தையும் கொடுத்தாங்க.

கடவுளுக்கு பிடிச்ச ஆபிராமோட மனைவி மேல ஆசை வைச்சதின் நிமித்தம், கடவுள் ராஜா
வோட வீட்டில பல பிரச்சினைகளை கொண்டு வந்தாரு. பயங்கரமான பிரச்சினைகள்
வந்திச்சு.

கற்பனைக் கதை 1
ராஜா யோசிச்சு பார்த்தப்ப ஆபிராம் தான் புதுசா வந்திருக்கான். இவன் மூலமா
இருக்குமோனு விசாரிக்கும்போது, சாராய் அவனோட மனைவினு தெரிஞ்சது

அல்லது

கற்பனைக் கதை 2
கடவுள் ராஜாவோட பேசினது – ஆபிராம் என்னோட மகன், சாராய் அவனோட மனைவி. அவ மேல
ஆசைப்பட்டா, உன்னை உயிரோட விடமாட்டேனு மிரட்டிருக்கலாம்.

தொடர்ச்சி

ராஜா ஆபிராமை நோக்கி
ஆபிராம், இன்னும் ஒரு நிமிசம் கூட நீ இங்க இருக்கக் கூடாது. உடனே கிளம்பிடு.
சாராய் உன் மனைவினு சொல்லாம போய்விட்ட. அவள நான் மனைவியாக்கிருந்தா உன்னால
என்ன பண்ண முடியும். உடனே அவள கூட்டிக்கிட்டு போய்விடு.

ஆபிராமும் எல்லாரையும் கூட்டிக்கொண்டு தன்னோட பிரயாணத்தை பழைய பாதையில்
அப்படியே திரும்பி போக ஆரம்பிச்சாரு.

ஆபிராம் – 75

ஆபிராம் வயது 75

கடவுள் ஆபிராமை நோக்கி,
· நீ உன்னோட அப்பா, சொந்தக்காரங்க, வீடு, நாடு எல்லாத்தையும் விட்டுட்டு, நான்
சொல்ற இடத்துக்குப் போ. சரியா?
· அங்க உன்னைய பெரிய குடும்பமாக்கி, உன்னோட பேரை பெருமைப்படும்படி செய்வேன்.

  • நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
  • உன்னை ஆசிர்வதிக்கிறவங்கள, நானும் ஆசிர்வதிப்பேன்.
  • உன்னை சாபம் கொடுத்தாங்கன்னா அவங்களுக்கும் சாபம் தான்.
  • பூமியிலிருக்கிற எல்லா சந்ததியும், உனக்குள்ள ஆசிர்வதிக்கப்படும்.

ஆபிராம் – சரி கடவுளே, நான் கிளம்புறேன்.

ஆபிராம் வீடு

ஆபிராம்
– எல்லாரும் கிளம்புங்க, கடவுள் என்னை கிளம்ப சொல்றாங்க. நாம எல்லாரும்
கிளம்பியாகனும்.
லோத்
– நானும் உங்க கூட வர்றேன் சித்தப்பா.
ஆபிராம்
– சரி வா. உன்னையும் கூட்டிட்டுப் போறேன்.

ஆபிராம் தன்னோட கானானுக்குக் கூட்டிட்டு போனவங்க
1. மனைவி – சாராய்,
2. சகோதரன் மகன் – லோத்,
3. சம்பாதீச்ச எல்லா பொருள்கள், ஆடு, மாடுகள்
4. வேலைக்காரங்க

கானான் தேசத்திலே மோரே சமவெளி வந்தப்ப

கடவுள் –
ஆபிராம், இந்த இடத்த நல்லா பார்த்துக்கோ, உன்னோட சந்ததிக்குத் தான் இந்த இடம்
ஆபிராம் –
நன்றி கடவுளே.
அப்புறம் அந்த இடத்தில ஒரு பலிபீடம் கட்டிட்டு, வேற இடத்துக்குப் போனாங்க.

படத்தில காட்டினபடி ஒரு மலைக்குப் போனாங்க. அந்த மலைக்குக் மேற்கு திசையில
பெத்தேல், கிழக்கே ஆயி பட்டணம் இருந்துச்சு. அங்கேயும் ஒரு பலிபீடம் கட்டி,
கடவுளை வணங்கினாரு.

அப்புறம் அப்படியே தெற்க ஒவ்வொரு இடமா போய்கிட்டு இருந்தாங்க. அப்ப அந்த
தேசத்தில பஞ்சம் வந்திருச்சு.
அதனால ஆபிராம் எல்லாரையும் கூட்டிகிட்டு எகிப்து நாட்டுக்குப் போனான்.

பாபேல் – பேலேகு காலம் – 1753 to 1992

நோவாவின் சந்ததி மக்கள், அநேகராய் இருந்த படியால், ஒரு ஒரு இடமாக கிழக்கிலுருந்து செல்ல ஆரம்பித்தனர். அவர்கள் சிநெயார் தேசத்து சமவெளிகளுக்கு வந்த போது.

மக்களில்
சிலர் – நாம ரொம்ப தூரம் வந்துட்டே இருக்கோம். நடக்க முடியாதவங்க பின்னால வராங்க. அதனால தொலைஞ்சி போய்டலாம். இந்த இடத்தில ஒரு நகரத்தையும், வானத்தை தொடுற அளவுக்கு ஒரு பெரிய கோபுரம் கட்டுவோம்.
மற்றவர் – சரி சரி. கட்டலாம். நாம மண்ண அறுத்து, அதை சுட்டு செங்கல் செய்வோம்.
சிலர் – ஆமா ஆமா அப்படியே பண்ணலாம். செங்கல் ஒன்னு மேல ஒன்னு வைச்சு ஒட்டுறதக்கு களிமண் வைச்சுக்கலாம்.
சிலர் – நம்மள யாராலாயும் அசைக்க முடியாது. எங்க போனாலும் இந்த வானுயர கோபுரத்தைப் பார்த்துட்டு வந்து ஒன்னு சேர்ந்துக்கலாம்.
சிலர் – இதை மட்டும் நாம கட்டிட்டோம். நம்மள அடிச்சுக்க ஆளே கிடையாது.
 
கடவுள் – இவங்க ரொம்ப பெருமையாக இருக்காங்க. இது நல்லதுக்கு இல்ல.
அதனால அவங்க பேசுற மொழியை மாத்திடலாம்னு சொல்லி நிறைய மொழியை கொடுத்துட்டாரு. அப்படியே பூமி முழுதும் போகிற மாதிரி பண்ணிட்டாரு.
அந்த இடத்துக்குப் பேரு பாபேல்.

குறிப்பு
இந்த பிரிக்கப்பட்ட காலம் பேலேகுவின் காலம் என சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இது பேலேகு பிறந்த 1753 லிருந்து 1992 வரை இருக்கலாம்.
பூமி எங்கும் போகிற மாதிரி செய்தார் என்று சொல்லுவது, மக்கள் பூமி அதிர்ச்சி காரணமாக போனாங்களா அல்லது எப்படி போனாங்க என்று குறிப்புகள் இல்லை.

ஆபிராம்

                                        தேராகு
1. ஆபிராம்                     2. நாகோர்                          3. ஆரான்
i. மில்காள் , ii. இஸ்கால், iii.லோத்

மனைவிகள்
1. ஆபிராம் – சாராய்
2. நாகோர் – மில்காள்  (ஆரானின் மகள் – அண்ணன் மகள்)

கல்தேயருடைய தேசத்திலும், தான் பிறந்த   “ஊர்” என்ற இடத்தில்  ஆரான் மரித்துப் போனான்.

பின்பு தேராகு தன்  வீட்டிலுள்ள ஆபிராம் மற்றும் லோத் ஐ கூட்டிக்கொண்டு கானான் தேசத்திற்குப் புறப்பட்டார்கள். ஆரான் என்ற இடம் வந்த போது, அதற்கு மேல் போகாமல் அங்கேயே இருந்து விட்டார்கள். தேராகு அங்கேயே மரித்தான்.