நாற்பது நாட்கள் மழை பெய்த பின், கடவுள் நோவாவை நினைத்து, மழையை நிற்கப் பண்ணினார். பூமிக்கு அடியிலிருந்து வர வைத்த ஊற்றுத் தண்ணீர் எல்லாத்தையும் நிப்பாட்டிட்டார். பிறகு காற்றையும் வீசச் செய்தார். மலைக்கு மேல 15 முழத்துக்கு நின்ன மழைத் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமா வற்றிப் போச்சுது.
15.07.நோவா 600 வயது – பேழை அரராத் மழையின் மேல தங்கிற்று.
01.10.நோவா 600 வயது – மலைச் சிகரங்கள் தெரிய ஆரம்பித்தது.
பத்து நாள் கழிச்சு ஒரு காகத்தை நோவா வெளியில விட்டாரு. அது தங்க இடம் இல்லாம சுத்திட்டு சுத்திட்டு வரும்.
7 நாள் கழிச்சு புறாவை வெளில விட்டாரு. அது ஒலிவ மரத்தோட இலையை கொத்திட்டு வந்துச்சு.
திருப்பி 7 நாள் கழிச்சு புறாவை வெளில விட்டாரு. அது திருப்பி வரவே இல்லை.
01.01.நோவா 601 – நோவா பேழையை திறந்து பார்த்தபோது பூமியில தண்ணீர் இல்லை. ஆனா ஈரப்பதமா இருந்தது.
27.02.நோவா 601 – பூமி முழுவதும் காய்ந்து போய் இருந்துச்சு.
கடவுள் நோவாவை நோக்கி
நோவா அவ்ளோ தான் எல்லாம் முடிஞ்சி போச்சு. வெளில வா. நீ, உன் மனைவி, மகன்கள் மற்றும் மருமகள்கள் எல்லாம் வெளில வாங்க.
எல்லா விலங்குகள், பறவைகள், ஊரும் பிராணிகள் எல்லாத்தையும் திறந்து விடு. அது வந்து பலுகிப் பெருகட்டும்.
நோவா : சரி கடவுளே.
எல்லாத்தையும் திறந்து விட்ட உடனே, எல்லாம் ஜோடி ஜோடியா வெளில வந்துச்சு.
நோவா ஒரு பலிபீடம் கட்டி அதுல சுத்தாமான விலங்கு கொஞ்சம், பறவை கொஞ்சத்தையும் தகன பலியிட்டார்.
கடவுளுக்கு ரொம்ப சந்தோசம். நிறைய கோபத்தில இருந்த கடவுள் நோவாவை நினைத்து சந்தோசப்பட்டார்.
கடவுள் தன்னோட மனசுக்குள்ளவே
மனிதன் சின்ன வயசு முதலே பொல்லாத நினைவு உடையவன்தான். அதனால அவன் செய்கின்றதை வைச்சு பூமியை சபிக்க வேண்டாம். அதே மாதிரி எல்லா மிருகம், பறவை எல்லாத்தையும் அழிக்க வேண்டாம்.
பகல் இரவு
விதைப்பு அறுப்பு
மழைக்காலம், கோடைகாலம்
வெயில், குளிர் எல்லாமே பூமி இருக்கிற வரைக்கும் இருக்கட்டும்.
குறிப்பு
நோவா 600 – நோவா 600 வயதானபோது – ஆதாம் முதல் 1656 வது வருடமாக இருக்கலாம். ஆதியாகமம் 5ம் அதிகாரத்தின்படி நோவா பிறந்த வருடம் 1056. அதனால 1056+600= 1656ம் வருடம்.