வெள்ளம் வடிந்த பின்
நோவா விவசாயம் பண்ண ஆரம்பித்தான். விவசாயத்தில் நல்ல பலன் கிடைத்தது. அதனால ஒருநாள் அளவுக்கு அதிகமாக திராட்சரசத்தைக் குடிச்சிட்டு போதைல தன்னோட ஆடை விலகினது கூட தெரியாம படுத்துக் கொண்டிருந்தான். அப்ப நோவாவோட கடைசி மகன் காம் வந்து பார்த்துட்டு, தன் அண்ணன்மார்கள் கிட்ட போய் சொன்னான். சேமும், யாப்பேத்தும் ஒரு போர்வையை பின்னாலே திரும்பி கொண்டுவந்து நோவாவை மூடிட்டுப் போனாங்க.
நோவா திராட்சரசத்தோட போதை தெளிஞ்சப்ப, நடந்தத தெரிஞ்சப்ப மூன்று பேரையம் கூப்பிட்டாரு.
சேமை நோக்கி உன்னோட கடவுளுக்கு நன்றி. உனக்கு கானான் அடிமையாயிருப்பான். உன் கூடாரத்திலே யாப்பேத் தங்கியிருப்பான்.
யாப்பேத்-ஐ நோக்கி உன்னோட சந்ததியை கடவுள் பெருகப்பண்ணுவார். கானான் உனக்கு அடிமையாயிருப்பான்.