எகிப்து தேசத்தை விட்டு புறப்பட்டபோது, ஆபிராம் பெரிய பணக்காரனாயிருந்தாரு.
அவருக்கு தங்கம், வெள்ளி, ஆடுகள், மாடுகள் ஏராளமாயிருந்தது.
அப்படியே அவங்க ஒவ்வொரு இடமா வந்து, பழைய மலைக்கு வந்தாங்க. அந்த மலை ஏற்கனவே
பார்த்தோம். அது ஆயி பட்டணத்திற்கும், பெத்தேலுக்கும் நடுவுல பலிபீடம் கட்டின
வரைக்கும் வந்தாங்க.
ஆபிராம் அங்க கடவுள தொழுது கொண்டார்.
அங்கேயே தங்குறதுக்கு கூடாரம்லாம் போட்டாங்க. லோத்துக்கும் நிறைய ஆடு மாடுகள்,
கூடாரம்லாம் இருந்துச்சு. அதனால அங்க பிரச்சினை வந்துச்சு. ஆபிராம்
வேலைக்காரங்களும், லோத் வேலைக்காரங்களும் சண்டை போட்டுட்டே இருந்தாங்க.
ஆபிராம் – லோத் இங்க வா. நம்ம இரண்டு பேரும் சொந்தக்காரங்க. ஆனா நம்ம
வேலைக்காரங்க, நமக்குள்ள சண்டையை மூட்டி விட்ருவாங்க. அதனால, நாம பிரிஞ்சி
போறதுதான நல்லது.
லோத் – சரி சித்தப்பா. நான் இப்ப என்ன செய்யன்னு சொல்லுங்க நான்
கேட்டுக்கிடுறேன்.
ஆபிராம் – ம்ம். அப்படியே பண்ணிடலாம். பிரிஞ்சி போறதுதான் நல்லது. இவ்ளோ இடம்
இருக்கு. நீ கிழக்க போனா நான் மேற்க போறேன். நீ வடக்க போனா நான் தெற்க போறேன்.
நீயே சொல்லு சரியா?
லோத் – சரி சித்தப்பா. யோர்தான் பக்கத்தில அழகா இருக்குது. சோவார் போகிற வழி
வரைக்கும் அது ஏதேன் தோட்டம் போல, ரொம்ப அழகா இருக்குது. அதனால நான் அங்கேயே
போறேன்.
ஆபிராம் – ம்ம். சரி. நீ அங்க போ.
லோத்தும் அவனோட எல்லா ஆடுகள், மாடுகள், மற்றும் வேலையாட்கள் எல்லாரையும்
கூட்டிட்டு யோர்தான் பக்கத்தில சோதோம்-க்கு எதிராக கூடாரம் போட்டு வாழ
ஆரம்பிச்சாங்க. அந்த சோதோமில வாழுறவங்க ரொம்ப ரொம்ப கெட்டவங்க. அவங்கள கடவுள்
வெறுத்தாரு.