நோவா வம்சங்கள் – சில குறிப்புகள்

நிம்ரோத்
நிம்ரோத் – காம் வம்சம் – பராக்கிரமசாலி – பலத்த வேட்டைக்காரன் என்ற சொல் உண்டாயிற்று.
கட்டின பட்டிணங்கள்
பாபேல், ஏரேக், அக்காத், கல்னே – ஆண்ட நாடுகளின் மூலம்
பின்பு கட்டின பட்டிணங்கள்
நினிவே, ரெகொபோத், காலாகு, ரெசேன் (நினிவேக்கும் காலாகுக்கும் நடுவிலுள்ள பெரிய பட்டணம்.)

கானான்
எல்லைகள்

பேலேகு

சேமின் வம்சம் – இவர் வாழும்பொழுது தான் பூமியுள்ள மக்களை கடவுள் பிரித்தார்.

யொக்தான்
சேமின் வம்சம் – பட்டணங்கள் – மேசா முதல் செப்பார் மலை வரைnull

ஆபிராம் வரையிலான சந்ததி

பெயர்

வாழ்நாள் வருடம்

மகன்

தந்தையின் ஆயுளில் பிறந்த வருடம்

மொத்த வருடம்

நோவா

950

சேம்

498

1554

சேம்

600

அர்பக்சாத்

100

1654

அர்பக்சாத்

438

சாலா

35

1689

சாலா

438

ஏபேர்

30

1719

ஏபேர்

464

பேலேகு

34

1753

பேலேகு

239

ரெகூ

30

1783

ரெகூ

239

செரூகு

32

1815

செரூகு

230

நாகோர்

30

1845

நாகோர்

138

தேராகு

29

1874

தேராகு

205

ஆபிராம்,

நாகோர்,

ஆரான்

70

1944

ஆபிராம்

ஈசாக்கு

நோவா – வெள்ளம் வடிந்த பின்- தொடர்ச்சி

வெள்ளம் வடிந்த பின்
நோவா விவசாயம் பண்ண ஆரம்பித்தான். விவசாயத்தில் நல்ல பலன் கிடைத்தது. அதனால ஒருநாள் அளவுக்கு அதிகமாக திராட்சரசத்தைக் குடிச்சிட்டு போதைல தன்னோட ஆடை விலகினது கூட தெரியாம படுத்துக் கொண்டிருந்தான். அப்ப நோவாவோட கடைசி மகன் காம் வந்து பார்த்துட்டு, தன் அண்ணன்மார்கள் கிட்ட போய் சொன்னான். சேமும், யாப்பேத்தும் ஒரு போர்வையை பின்னாலே திரும்பி கொண்டுவந்து நோவாவை மூடிட்டுப் போனாங்க.
நோவா திராட்சரசத்தோட போதை தெளிஞ்சப்ப, நடந்தத தெரிஞ்சப்ப மூன்று பேரையம் கூப்பிட்டாரு.
சேமை நோக்கி உன்னோட கடவுளுக்கு நன்றி. உனக்கு கானான் அடிமையாயிருப்பான். உன் கூடாரத்திலே யாப்பேத் தங்கியிருப்பான்.
யாப்பேத்-ஐ நோக்கி உன்னோட சந்ததியை கடவுள் பெருகப்பண்ணுவார். கானான் உனக்கு அடிமையாயிருப்பான்.

நோவாவின் வம்சம் – சேம் – அர்பக்சாத் – இயேசுவின் வம்சம் தொடர்ச்சி

அர்பக்சாத்
1. சாலா
     i. ஏபேர்
         i. பேலேகு
         ii. யொக்தான்.
                 1.அல்மோதாத்,
                 2.சாலேப்பையும்,
                 3.அசர்மாவேத்
                 4.யேராகை
                 5.அதோராம்
                 6.ஊசாலை
                 7.திக்லாவையும்,
                 8.ஓபால்
                 9.அபிமாவேல்
                 10.சேபா
                 11.ஒப்பீர்,
                 12.ஆவிலா,
                 13.யோபா

ஆதியாகமம் 10

நோவாவின் வம்சம்
மகன்கள் – யாப்பேத், சேம், காம்

1. யாப்பேத்
     1. கோமர்
          i. அஸ்கினாஸ், ii. ரீப்பாத்து, iii. தொகர்மா
     2. மாகோகு
     3. மாதாய்
     4. யாவான்
          i. எலீசா, ii. தர்ஷீஸ்,iii. கித்தீம், iv. தொதானீம்
     5. தூபால்
     6. மேசேக்கு
     7. தீராஸ்
2. சேம்
    1. ஏலாம்
    2. அசூர்
    3. அர்பக்சாத்
         i. சாலா
    4. லூத்
    5. ஆராம்
         i. ஊத்ஸ்,ii. கூல்,iii. கெத்தேர்,iv. மாஸ்
3. காம்
    1. கூஷ்
         i. சேபா,ii. ஆவிலா,iii. சப்தா,iv. ராமா,
         v. சப்திகா
              1. சேபா
              2. திதான்
    vi. நிம்ரோத்
    2. மிஸ்ராயீம்
         i. லூதீம், ii. அனாமீம், iii. லெகாபீம்,iv. நப்தூகீம்,v. பத்ருசீம்,vi. கஸ்லூகீம்,vii. கப்தொரீம்
    3. பூத்
    4. கானான்
         i. சீதோன்,ii. கேத்,iii. எபூசியர்,iv. எமோரியர்,v. கிர்காசியர்,vi. ஈவியர்,vii. அர்கீரியர்,viii. சீநியர்,ix. அர்வாதியர்,x. செமாரியர்,xi. காமாத்தியர்

தொடரும்……..

ஆதியாகமம் 9

நோவா தகனபலியிட்டது கடவுளுக்கு ரொம்ப பிடிச்சதால
கடவுள் அதிகமாகவே ஆசிர்வதிக்க ஆரம்பிச்சாரு.
சகல மிருகங்களும், பறவைகளும், பூமியில் நடமாடுகிற யாவும், கடல்ல இருக்கிற எல்லாமே மனிதனுக்குப் பயப்படும்.
இனிமே நீங்க அசைவ உணவும் சாப்பிடலாம். ஆனா இரத்தத்தோட சேர்த்து சாப்பிடாதீங்க.

இரத்தத்தோட ஏன் சாப்பிடக் கூடாது என்றால்
1.இரத்தத்தில தான் உயிர் இருக்குது.
2.இரத்தப்பழி எனக்கு சுத்தமா பிடிக்காது. இரத்தம் சிந்தினா பழி வாங்குவேன். அது மனுசனா இருந்தாலும் சரி, விலங்கா இருந்தாலும் சரி. காயீனுக்கு எப்படி சாபம் வந்துச்சோ, அதே மாதிரி அவனவன் சகோதரிடத்திலும் பழி வாங்குவேன்.
3.நீங்கள் என்னோட சாயல்ல உருவானபடியினாலே, இரத்தம் சிந்தக்கூடாது. அப்படி யாராவது ஒருவனை கொன்னுட்டா, அவனைக் கொல்றதுக்கு உங்களுக்கு உரிமை கொடுக்கிறேன்.
உடன்படிக்கை
கடவுள் மேலும் நோவாவை நோக்கி சொன்னது,
நோவா, உன் காலத்திலே
உன் சந்ததி காலத்திலே
பேழையில உயிர் பிழைச்ச எல்லா உயிர்கள் காலத்திலும், இனி உண்டாகப்போகிற                உயிர்கள் காலத்திலேயும்
பறவைகள், காட்டு மிருகம், நாட்டு மிருகம் எல்லாத்தோடயும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.
அது என்னவென்றால்,
இப்ப அழிச்ச மாதிரி, இனிமே உங்களை அழிக்க மாட்டேன்.
எப்படி என்றால்
இனிமே மழை பெய்யும் போது வானவில் தோன்றும். அதை பார்க்கும்போது நான்    இந்த உடன்படிக்கையை நினைச்சு தண்ணீர் வெள்ளமா தேங்காதபடி பார்த்துக்கொள்வேன். என்றார்

குறிப்பு
கர்த்தரின் ஆசிர்வாதங்களும், சாபங்களும்
1. ஆதாம், ஏவாள் பாவம் செய்தபோது – பூமியையும் சபித்தல், கர்ப்ப வேதனை.
2. காயீன் – விவசாயம் பலன் தராது, அலைந்து கொண்டிருப்பாய்.
3. நோவா – இனிமே பூமியை சபிக்க மாட்டேன், அசைவம், மரண தண்டனை கொடுக்கலாம், வானவில். (லாமேக்கு கூறியபடி நோவா காலத்தில ஒரு விடுதலை)

ஆதியாகமம் 8

நாற்பது நாட்கள் மழை பெய்த பின், கடவுள் நோவாவை நினைத்து, மழையை நிற்கப் பண்ணினார். பூமிக்கு அடியிலிருந்து வர வைத்த ஊற்றுத் தண்ணீர் எல்லாத்தையும் நிப்பாட்டிட்டார். பிறகு காற்றையும் வீசச் செய்தார். மலைக்கு மேல 15 முழத்துக்கு நின்ன மழைத் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமா வற்றிப் போச்சுது.
15.07.நோவா 600 வயது – பேழை அரராத் மழையின் மேல தங்கிற்று.
01.10.நோவா 600 வயது – மலைச் சிகரங்கள் தெரிய ஆரம்பித்தது.
பத்து நாள் கழிச்சு ஒரு காகத்தை நோவா வெளியில விட்டாரு. அது தங்க இடம் இல்லாம சுத்திட்டு சுத்திட்டு வரும்.
7 நாள் கழிச்சு புறாவை வெளில விட்டாரு. அது ஒலிவ மரத்தோட இலையை கொத்திட்டு வந்துச்சு.
திருப்பி 7 நாள் கழிச்சு புறாவை வெளில விட்டாரு. அது திருப்பி வரவே இல்லை.
01.01.நோவா 601 – நோவா பேழையை திறந்து பார்த்தபோது பூமியில தண்ணீர் இல்லை. ஆனா ஈரப்பதமா இருந்தது.
27.02.நோவா 601 – பூமி முழுவதும் காய்ந்து போய் இருந்துச்சு.

கடவுள் நோவாவை நோக்கி
நோவா அவ்ளோ தான் எல்லாம் முடிஞ்சி போச்சு. வெளில வா. நீ, உன் மனைவி, மகன்கள் மற்றும் மருமகள்கள் எல்லாம் வெளில வாங்க.
எல்லா விலங்குகள், பறவைகள், ஊரும் பிராணிகள் எல்லாத்தையும் திறந்து விடு. அது வந்து பலுகிப் பெருகட்டும்.
நோவா : சரி கடவுளே.
எல்லாத்தையும் திறந்து விட்ட உடனே, எல்லாம் ஜோடி ஜோடியா வெளில வந்துச்சு.
நோவா ஒரு பலிபீடம் கட்டி அதுல சுத்தாமான விலங்கு கொஞ்சம், பறவை கொஞ்சத்தையும் தகன பலியிட்டார்.
கடவுளுக்கு ரொம்ப சந்தோசம். நிறைய கோபத்தில இருந்த கடவுள் நோவாவை நினைத்து சந்தோசப்பட்டார்.
கடவுள் தன்னோட மனசுக்குள்ளவே
மனிதன் சின்ன வயசு முதலே பொல்லாத நினைவு உடையவன்தான். அதனால அவன் செய்கின்றதை வைச்சு பூமியை சபிக்க வேண்டாம். அதே மாதிரி எல்லா மிருகம், பறவை எல்லாத்தையும் அழிக்க வேண்டாம்.
பகல் இரவு
விதைப்பு அறுப்பு
மழைக்காலம், கோடைகாலம்
வெயில், குளிர் எல்லாமே பூமி இருக்கிற வரைக்கும் இருக்கட்டும்.

குறிப்பு
நோவா 600 – நோவா 600 வயதானபோது – ஆதாம் முதல் 1656 வது வருடமாக இருக்கலாம். ஆதியாகமம் 5ம் அதிகாரத்தின்படி நோவா பிறந்த வருடம் 1056. அதனால 1056+600= 1656ம் வருடம்.

ஆதியாகமம் 7

கடவுள் : நோவா.. நீ மட்டும் தான் ஒழுங்காக இருக்கிற. உனக்கு மட்டும் என் கண்களில் கிருபை கிடைச்சிருக்கு. நீ பூமியிலே நான் படைச்ச எல்லாத்தையும் உயிரோடே வைக்கவேண்டும்.
சுத்தமான சகல மிருகங்களிலும் 7 ஜோடி
அசுத்தமான மிருகங்களில் 1 ஜோடி
ஆகாயத்துப் பறவைகளில் 7 ஜோடி
எல்லாத்தையும் சேர்த்த பிறகு, ஏழு நாள் கழித்து மழை பெய்யும். சரியா?
நோவா : சரி கடவுளே..
நோவாக்கு அறுநூறு வயசு ஆனபோது.,,
நோவா கப்பல் செய்து, எல்லா மிருகங்களையும் ஏற்றி முடித்தபோது, கடவுள் பலத்த மழையை பெய்யப் பண்ணினார். நோவா தாமதம் செய்து கொண்டிருந்தபோது, அவனை தூக்கி கப்பல்ல கொண்டுபோய் விட்டுட்டு கதவை அடைத்து விட்டார்.
மழை நாற்பது நாள் பெய்தது. பூமியிலுள்ள எல்லா உயிரினங்களும் அழிஞ்சு போய்விட்டது. பெரிய மலைகளுக்கு 15முழத்துக்கு மேல மழைத்தண்ணி நின்னுச்சு. கப்பல் மட்டும் மேல மிதந்து கொண்டிருந்துச்சு. கப்பல்ல இருக்கிறவங்க மட்டும்தான் உயிர் பிழைச்சாங்க. தண்ணீர் 150 நாள் வரைக்கும் தண்ணீர் வற்றவில்லை.

ஆதியாகமம் 6

கடவுளின் மனஸ்தாபம்

அநேக பிள்ளைகள் பூமியிலே பெருக தொடங்கினார்கள். இராட்சதர்களும் வாழ்ந்தார்கள். கடவுளுக்கு பிரியமானவர்கள் அந்நிய பெண்களை திருமணம் செய்ய ஆரம்பித்தனர். அதனால் கடவுள் மனஸ்தாபப்பட்டார் .அநேக பொல்லாத வம்சங்கள் இருந்ததால், கடவுள் பூமியை அழிக்க விரும்பினார். இவங்க வருசம் நாற்பது தான் என்றார்.

நோவா
நோவா கடவுளிடத்தில் உண்மையாய் இருந்தார். கடவுளும் நோவாவோடு தினமும் பேசிக்கொண்டிருந்தார்.

கடவுள் : நோவா இந்தப் பூமியில் ரொம்ப அதிகமாக பாவம் பெருகிடுச்சு.
நோவா : என்ன கடவுளே இப்ப பண்ண?
கடவுள் : நான் இந்தப் பூமியிலுள்ள எல்லா மாம்சமானவற்றையும் அழிக்கப் போகிறேன்.
நீ ஒரு கப்பல் உண்டாக்கு.

கொப்பேர் மரம்.
நீளம் 300 முழம்
அகலம் 50 முழம்
உயரம் 30 முழம்

ஒரு ஒரு மாடியும் 10 முழம்.

நீ உன் மனைவி, பிள்ளைகள், மருமகள்கள், பேரன் பேத்திகள் மற்றும் எல்லா உயிருள்ள விலங்குகள், பறவைகள் , மாம்சமான எல்லாவற்றிலேயும் ஒரு ஜோடி எல்லாத்தையும் பேழையிலே ஏத்திக்கோ. அப்புறம் எல்லாருக்கும் தேவையான சாப்பாடு எடுத்துக்கோ.
நோவா : சரி கடவுளே அப்படியே பண்ணிடுறேன்.
குறிப்பு
(
1. இராட்சதர்கள் யார் என்பதை குறித்து பல கருத்துகள் உண்டு.
2. நாற்பது வருடங்களுக்கு மேலேயும் எல்லாரும் உயிரோட இருந்தாங்க. அப்ப கடவுள் 40 வருடந்தான் என்று சொன்னது.? கடவுள் பூமியை தண்ணீரால அழிச்ச பிறகு , குழந்தை பிறந்த வருடங்கள் 40 வருடங்களுக்குள்ளாக குறைந்தது. ஒரு வேளை கடவுள் பிறப்பு 40 வருடத்திற்குள் இருக்கும் என்று சொல்லிருக்கலாம்.)

ஆதியாகமம் 5

பெயர் வாழ்நாள் வருடம் மகன் தந்தையின் ஆயுளில் பிறந்த வருடம் மொத்த வருடம்
ஆதாம் 930 சேத் 130 130
சேத் 912 ஏனோஸ் 105 235
ஏனோஸ் 905 கேனான் 90 325
கேனான் 910 மகாலெயேல் 70 395
மகாலெயேல் 895 யாரேத் 65 460
யாரேத் 962 ஏனோக் 162 622
ஏனோக் 365 மெத்தூசலா 65 687
மெத்தூசலா 969 லாமேக் 187 874
லாமேக் 777 நோவா 182 1056
நோவா 950 சேம், காம், யாப்பேத் 500 1556

ஏனோக்கு கர்த்தருடன் தினமும் பேசிக்கொண்டிருப்பார். ஒருநாள் கர்த்தருடன் பேசிக்கொண்டிருந்த போது எடுத்துக்கொள்ளப்பட்டார்.
லாமேக்கு சபிக்கப்பட்ட பூமியில் இருந்து விடுதலை தருவான் என்று சொல்லி, நோவாக்கு பெயரிட்டான்.