🙏 துணைப்பாடல்கள் & ஜெபங்கள்

வானகம் வாழ்ந்திடும்
ஆண்டவர் கற்பித்த வேண்டல்

வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய்
வாழ்க உம் திருநாமம்
வருக உம் அரசு பெருக உம் விருப்பம்
வாழ்க உம் திருநாமம்

வானகம் போல வையகம் தனினும்
வாழ்க உம் திருநாமம்
தினமெங்கள் உணவை தயவுடன் தாரும்
வாழ்க உம் திருநாமம்

பாவங்கள் யாவும் பொறுத்தெமை ஆளும்
வாழ்க உம் திருநாமம்
பிறர் பிழை நாங்கள் பொறுப்பது போல
வாழ்க உம் திருநாமம்

சோதனை நின்றெமை விலக்கியே காரும்
வாழ்க உம் திருநாமம்
தீவினையிருந்தே மீட்டிட வாரும்
வாழ்க உம் திருநாமம்

ஆட்சியும் ஆற்றலும் அனைத்துன மாண்பும்
வாழ்க உம் திருநாமம்
இன்றுபோல் என்றும் இறைவனே உமதே
வாழ்க உம் திருநாமம்

ஆமென் ஆமென் அநாதியாய் ஆமென்
வாழ்க உம் திருநாமம்
ஆமென் ஆமென் அநாதியாய் ஆமென்
வாழ்க உம் திருநாமம்